தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வைகோ... அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்...!

தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வைகோ... அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்...!
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: December 4, 2019, 4:02 PM IST
  • Share this:
தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் என்றால் வைகோ மட்டுமே இருக்கிறார், அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் K ராஜூ  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கியது  தமிழக அரசுதான் என்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை அதிமுக அரசு 2-வது முறையாக பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது பெற்றுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இல்லை. அதன் விளைவாக அதனுடைய தோழமை கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு பல்வேறு வழக்குகளை போட்டு வருகின்றது  என்றும் தெரிவித்துள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரையில் ஸ்டாலின் அவர்களை நம்பி அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது. பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் இயக்கமே அழிந்து விட்டது போல திமுகவும் கலைஞர் என்ற பெருமை, பெரிய ஆளுமை இல்லாததால் திமுகவும் அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் தலைமைப் பொறுப்புக்கு வந்ததினால் ஸ்டாலினுக்கு எவ்வாறு அரசியல் இயக்கங்களை நடத்துவது, மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது கூட தெரியவில்லை.

Loading...

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அரசை குறை கூறிக்கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றமா? அல்லது தமிழக அரசு நீதிமன்றமா? என்று வைகோ நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ திமுக-வில் இணைந்து அவர் நினைத்ததை சாதித்து வருகிறார்.

திமுக வெளியிலிருந்து அசைக்க பார்த்தார். ஒன்றும் அசைக்க முடியவில்லை. குறிப்பாக ஆளுமை திறன் அதிகம் மிக்க அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பார் என்றால் அவர் வைகோ தான். எனவே அவருடைய அரசியல் தலைமைக்கு வாழ்த்து கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஊழல் மிகுந்த குடும்பம் என்றும் ஸ்டாலின் ஆட்சி அமைக்க தகுதி இல்லை என்று கூறி வந்த வைகோ, திமுகவை வெளியிலிருந்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால் கூட்டணி அமைத்து தற்போது அவர் ஸ்டாலினுைடய ஊதுகுழலாக மாறி இருக்கின்றார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Also see...
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...