"அதிமுகவின் தாய்க் கழகம் திமுக இல்லை... அது கலைஞரின் குடும்பச் சொத்து"- செல்லூர் ராஜு

வேலூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் பயன் என்பதை உணர்ந்து மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். நாங்கள் தான் அங்கு வெற்றி பெறுவோம். என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

Web Desk | news18
Updated: July 22, 2019, 3:29 PM IST
அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: July 22, 2019, 3:29 PM IST
”உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் வரும்; நம்பிக்கை தான் வாழ்க்கை” என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு  பல்லடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தை துவக்கி வைத்த பின் பேசிய அவர், “ திமுக அதிமுகவின் தாய்க் கழகம் இல்லை அது கலைஞரின் குடும்பச் சொத்து, கலைஞருக்குப் பிறகு தலைவராக அன்பழகனை கொண்டு வந்திருக்கலாம்; அவர்தானே மூத்த உறுப்பினர்.

ஆனால், தலைவராக ஸ்டாலின் தான் வந்திருக்கிறார். உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அவரது அழைப்பை புறம் தள்ளி விடுவார்கள்.


நம்பிக்கை தான் வாழ்க்கை... உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும்.

ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே, இதனைப் புரிந்து கொண்ட மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிப்பார்கள்.

வேலூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தான் பயன் என்பதை உணர்ந்து மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள். நாங்கள் தான் அங்கு வெற்றி பெறுவோம்" என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

Loading...

Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...