ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனியில் உள்ள பிரச்னைகள் தெரியுமா? ரவீந்திரநாத் கேள்வி

ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தோற்கடிக்க அதிமுக தொண்டர்கள் இரவு-பகல் பார்க்காமல் உழைப்பார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனியில் உள்ள பிரச்னைகள் தெரியுமா? ரவீந்திரநாத் கேள்வி
ரவீந்திரநாத் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு.
  • News18
  • Last Updated: March 23, 2019, 3:24 PM IST
  • Share this:
தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் டெபாசிட்டை இழப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான மறைந்த ஆண்டி தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, தேனி, மதுரை தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் ரவீந்தரநாத் குமார், ராஜ் சத்யன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தோற்கடிக்க அதிமுக தொண்டர்கள் இரவு-பகல் பார்க்காமல் உழைப்பார்கள் என்றார்.


இதைத்தொடர்ந்து பேசிய ரவீந்தரநாத், தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தேனி மக்கள் தகுந்த  பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

Also see...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்