எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது - அமைச்சர் செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

 • News18
 • Last Updated :
 • Share this:
  இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது நல்லது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஒரு மாதத்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்கப்பட்டுள்ளதாகவும், மத்திய தொகுப்பில் இருந்து முதல்கட்டமாக எகிப்து வெங்காயம் 500 டன் இறக்குமதியாக உள்ளதாகவும் கூறினார்.

  எகிப்து வெங்காயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ருசித்து பார்த்து அதன் தரத்தை உறுதி செய்திருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர் எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதய நோய்க்கும், சர்க்கரை நோய்க்கும் நல்லது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: