திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை சார்பில்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் வழங்குவதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவல் வதந்தி என்றும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறவில்லை என்றும், கொரோனா காலங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் தாங்களாகவே விற்பனை செய்வதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு துறையில் உள்ள காலி பணியிடங்களை உரிய தேர்வு நடத்தி விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.