"பெற்ற தாயும் இல்லை, அறிமுகப்படுத்திய தாயும் இல்லை..." - பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

செல்லூர் ராஜூ

என்னைப் பெற்ற தாயும் இல்லை, உலகத்திற்கு அறிமுகப்படுத்திய தாயும் இல்லை என்னை காப்பாற்றும் தாயாக உங்களையே நினைக்கிறேன் என வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

  • Share this:
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும்  கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு தாராப்பட்டி பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

மதுரை மாவட்டம் தாராபட்டி பகுதியில் உள்ள கோவிலில் வழிபட்டு திறந்தவெளி வாகனத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியவர், தொடர்ந்து கொடிமங்கலம், காமாட்சிபுரம், மேலமாத்தூர் மற்றும் கீழமாத்தூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். மேளதாளங்களுடன் வெடி வெடித்து கரகாட்டம், கும்ப மரியாதையுடன் அப்பகுதி பெண்கள், ஆண்கள் வரவேற்றனர்.

அங்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, "பத்தாண்டுகளில் தொகுதிகளில் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நான் கொண்டு வந்துள்ளேன். உங்கள் கோரிக்கைகளை உங்க வீட்டு பிள்ளையாக இருந்து செய்து வந்துள்ளேன்.

ALSO READ : ‘சீனி சக்கர சித்தப்பா...' - திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கிராமப்புற மக்களுக்கு அரசு திட்டங்கள் தங்கு தடையின்றி செல்ல என்னுடைய துறையில் ஊழலற்ற பணி செய்து உரியவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி ஆக எனது துறையில் செயல்பட்டுள்ளேன்.கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடியிசம் மதுரையில் குறைந்து இருக்கிறது. எந்த ரவுடியையும் , கட்டபஞ்சாயத்து செய்பவர்களையும் என்னுடன் நான் தற்போது வரை வைத்து கொண்டது இல்லை. காரில் வரும்போது தான் நான் அமைச்சர், கீழே இறங்கிவிட்டால் நானும் சமுதாயப் பிரதிநிதி. அ.தி.மு.க தொண்டன். என்னை பெற்ற தாயும் இல்லை, இந்த உலகத்தில் என்னை அறிமுகப்படுத்திய தாயுமில்லை, என்னை காப்பாற்றக்கூடிய தாயாக உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன்" என்று உணர்ச்சிகரமாக பேசினார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: