கோசாலைகளில் கன்றுகளை பராமரிக்க 20கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்வு நங்கநல்லூர் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயில் நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் “கோசாலைகளில் கன்றுகளை பராமரிக்க 20கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பழனி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் பசுக்கள் பராமரிப்பில் உள்ளது. அதே போல் நங்க நல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள 20க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கன்று பாதுகாப்பு பெட்டகம் உப்புக்கள் புரத சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி உள்ளோம்” என தெரிவித்தார்.
மேலும் 121 பசு மடங்களில் 3000க்கும் மேற்பட்ட பசு மடங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cow, Minister Sekar Babu