ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கருணாநிதி செய்தது தவறு என்றால் அதே தவறை மு.க.ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர் பாபு

கருணாநிதி செய்தது தவறு என்றால் அதே தவறை மு.க.ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

ஆகம விதிப் படி அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒடுக்கப்பட்ட மக்களை அர்சகராக்கியது கலைஞர் செய்த தவறு என்றால் அந்த தவறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செய்வார் என்றும், சுப்பிரமணியன் சுவாமியின் மிராட்டல்களுக்கு பணியும் அரசு தமிழக அரசு அல்ல எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “தமிழக முதலமைச்சர் கடந்த 14ஆம் தேதி இந்து சமய அறநிலைய துறை கோயில்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவது நிமித்தமாக 216 காலி பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதில் 58 நபர்கள் கோயில் அர்ச்சகர் 2ஆம் நிலையில் ஆகம விதி படி முறையாக தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த திருக்கோயில்களில் அர்சகர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாரும் எப்போதும் மேலே வர கூடாது எனும் சில விஷமத் தனமானாவர்கள் சில கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

35 வயத்துக்குட்பட்ட இளைஞர்கள் 58 பேரை இன்று திருக்கோயில் பணியாளராக நியமித்துளோம். அடுத்த தலைமுறைக்கு என சீர்திருத்த நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

பட்டாசார்யார்களையோ அர்சகர்களையோ பணி நீக்கம் செய்ய வில்லை. இந்த அரசை அர்சகர்களுக்கு எதிரான அரசை போன்று சிலர் சமூக ஊடகங்களில் சித்தரித்து வருகின்றனர்.

ஓதுவார் பணி நியமன ஆணை

இந்துத்துவா பிரச்சினைகளை கையிலெடுப்பவர்கள், வேலை இல்லாமல் இருப்பவர்கள் இது போன்ற பிரச்சனைகளை முன்னெடுகின்றனர். வெளிப்படை தன்மையோடு மனிதாபி மானத்தோடு கோயில்களில் உரிய பணிகளை வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

தேனுபுரீஸ்வரர் கோயிலில் சுஹாஞ்சனா எனும் பெண் ஓதுவாரை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாடும் பாடல் உருகாத மனதை கூட உருக்கும். ஆகம விதிப் படி பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார். சீர்கெட்டு இருந்த இந்து சமய அறநிலைய துறையை சீர்செய்து வருகிறார் முதலமைச்சர்.

சுப்பிரமணிய சாமியின் மிராட்டல்களுக்கு பணியும் அரசு தமிழக அரசு அல்ல. 1971 இந்து சமய அறநிலைய சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்ட பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு, 60 வயது வரை அர்சகர்களுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓதுவார் சுஹாஞ்சனா

ஒடுக்கப்பட்ட மக்களின் பணியை கலைஞர் அர்சகராக்கியது தவறு என்றால் அந்த தவறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டாயம் செய்வார். இந்து சமய அறநிலைய துறையின் 627 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளோம். பரம்பரை அறங்காவலர் எனும் பெயரில் சொத்துக்களை சூறையாடியவர்களை சட்ட ரீதியாக நீக்கி இருக்கிறோம்.

Must Read : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது... உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் - சுப்பிரமணியன் சுவாமி

அர்ச்சகர் இரண்டு நிலையில் உள்ளவர்களை தான் தற்போது நியமித்துள்ளோம். தற்காலிக பணியில் உள்ள அர்சகர்களை பணிநியமனம் செய்வோம். ஆக்க பூரவமான பணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை இழப்பு ஏற்பட்டால் அந்த திருக்கோயிகளில் மற்ற பணிகளில் பணி அமர்த்த திட்டமிட்டு உள்ளோம்” என்று கூறினார்.

Published by:Suresh V
First published:

Tags: MK Stalin, Subramanian Swamy