ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சொத்துவரி உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

சொத்துவரி உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

சேகர் பாபு

சேகர் பாபு

Property tax hike : சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்து தான் என்று கூறியுள்ள அமைச்சர் சேகர் பாபு, மக்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தினால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து இது குறித்து முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அமைச்சர் சேகர்பாபு தலைமையில், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர்களுடன் நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிக வாடகை வசூலிப்பது தொடர்பாக சீராய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்து சமய அறநிலைத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

  சொத்து வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாடு அரசிற்கு 5 லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்து இருக்கிறது, ஒரு நாளிற்கு 23 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது, கடந்த 23 ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை, சொத்து வரி உயர்வு என்பது ஒரு கசப்பான மருந்து தான், மக்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தினால் முதலமைச்சர் பரிசீலனை செய்து, இதுகுறித்து முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

  Must Read : நீட் விலக்கு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? - ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு விளக்கம்

  15-வது நிதி ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாட்டிலுள்ள நகர்ப்புறங்களில் 25 சதவீதம் முதல் 100 சதவிகிதம் வரை, சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

  Read More : மத்திய அரசை காரணம் காட்டி மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா? சொத்து வரி உயர்வுக்கு சீமான் கண்டனம்

  சொத்து வரி எவ்வளவு உயர்வு?

  600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

  601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

  1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி அதிகரிப்பப்பட்டுள்ளது.

  இதேபோல, 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌ சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Minister Sekar Babu, Property tax