டாஸ்மாக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும்... கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

திருக்கோவிலில் பக்கதர்கள் வருவதற்கு தான் அனுமதி வழங்கவில்லை. பூசாரிகள் தினசரி பூஜை செய்துதான் வருகின்றனர்.

  • Share this:
    டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் இன்று துவங்கி உள்ளோம். அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்கள் ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். எனவும் திருக்கோவில் பக்கதர்கள் வருவதற்கு தான் அனுமதி வழங்கவில்லை. பூசாரிகள் தினசரி பூஜை செய்து தான் வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை. கோவிலில் நகை, சிலை திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுதொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.

    Must Read : என் தலைமையில் செயல்பட்டிருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் - சசிகலா

    மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோவில்கள் புதுப்பிக்கும் பணி தெப்ப குளங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோயில் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது என்றும் அனைத்து திருக்கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை கட்டாயமல்ல விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்கு படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடுவு எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
    Published by:Suresh V
    First published: