Home /News /tamil-nadu /

வைகுண்ட ஏகாதசி: நாளை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி - அமைச்சர் சேகர்பாபு

வைகுண்ட ஏகாதசி: நாளை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி - அமைச்சர் சேகர்பாபு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Vaikunda Ekadasi : வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதேசி தினமான நாளை கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளைய தினம் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார். எனவே வைகுண்ட ஏகாதேசி தினமான நாளைய தினம் கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

    வருகின்ற 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ள வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கும்பாபிஷேக பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன.

    Must Read : வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ

    இந்நிலையில், ஏற்கனவே கும்பாபிஷேகம் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர் இதற்கு உரிய நடவடிக்கைகள் முதல்வரின் ஆலோசனையைப் பெற்று மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Minister Sekar Babu, Temple, Vaikunda ekadasi

    அடுத்த செய்தி