ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அய்யர்மலை ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு உறுதி

அய்யர்மலை ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு உறுதி

சேகர்பாபு

சேகர்பாபு

TN Assembly : குளித்தலை தொகுதி, அய்யர்மலை அருள்மிகு ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக சட்டப்பேரவையில் வினா-விடைகள் நேரத்தில், குளித்தலை தொகுதி, அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2008ஆம் ஆண்டு குடமுழுக்கிற்கு பின், கடந்த ஆண்டு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, தொல்லியல் துறை மற்றும் மண்டல குழுவில் ஆலோசனை மேற்கொண்டு அனுமதி பெறவும், அடுத்த கட்டமாக வல்லுநர் குழு அனுமதிக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Must Read :  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மேலும், ரூ.1.25 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறிய அவர், வரும் 16ஈம் தேதி ரோப்கார் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாகவும், தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

Published by:Suresh V
First published:

Tags: Minister Sekar Babu, TN Assembly