• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் சீரமைப்பு பணி - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் சீரமைப்பு பணி - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

ஒரு ஆண்டிற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மறுசீரமைப்பு வேலைகள் முடிக்கப்படும்.

  • Share this:
    2018ஆம் ஆண்டு தீ விபத்தினால் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நுழைவாயில் இன்னும் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கூறிய பதிலுரையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயில் தீ விபத்து நடைபெற்று அதற்கான குழு அமைக்கப்பட்டு அதனை மறுசீரமைப்பு செய்ய நாமக்கல் மாவட்டத்தில்தான் கல் எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாம அதற்கான முதல்கட்ட பணிகளை தொடங்கினார் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது அதை எப்போது முடிக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மதுரையில் 2018 ஆம் ஆண்டு தீ விபத்து நடைபெற்றது. அதற்குப் பிறகு கோவிலை சரி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு நடத்திய முதல் கூட்டத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை என்பதை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

    மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான யானையின் உடல் நிலை சரியில்லை என்றவுடன் நேரடியாக சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அப்போது, தீ விபத்தினால் சேதமடைந்த இருந்த அந்த வீரராகவர் வாயிலை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி இந்த மாவட்ட அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நானும் சென்று அதனை ஆய்வு செய்து அதற்காக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அற்கான கற்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    Must Read : பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை - ஆச்சரியம் தெரிவித்த பொன்முடி

    நாமக்கல்லில் அதற்கான ஆட்கள் தயாரித்து அங்கிருந்து கொண்டு வரும்போது சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக கோயில் வளாகத்திலேயே மண்ணை நிரப்பி, அந்த பணிகள் நடந்து வருகின்றன. ஒரு ஆண்டிற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மறுசீரமைப்பு வேலைகள் முடிக்கப்படும் என்பதை பேரவையில் பதிவு செய்கிறேன் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: