தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு வரும் 28 ம் தேதி பாரிமுனை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதனை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஐசரி கணேஷ் ஆகியோர் சந்தித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.
இந்த புகைப்பட கண்காட்சி முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்கும்படி இருக்கும் எனவும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் வருகை தருவது திமுகவினருக்கு மகிழ்ச்சியை தரும் எனவும் அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam, Mayor Priya, Minister Sekar Babu