சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, கோயில்களில் பக்தர்களுக்கு நாள்முழுவதும் இலவச பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 10 முக்கிய திருக்கோயில்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்த திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களிலும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பக்தர்களுக்கு, பொங்கல், தயிர்சாதம், லட்டு, புளியோதரை, சுண்டல் என 4 முதல் 6 வகையிலான பிரசாதங்கள், குறிப்பிட்ட திருக்கோயில்களில் வழங்கப்படும்.
கோயில்களில் இலவச பிரசாத திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. முன்னதாக 200 பக்தர்களுக்கு மட்டுமே பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்றுமுதல் நாள்தோறும் பிரசாதம் கொடுக்கப்படுகிறது. நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்றி இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.