ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்கிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்கிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

அன்னதான திட்டத்தை பொருத்தவரையில் 754 திருக்கோவில்களின் செயல்பட்டு வருவதோடு, நாளொன்றுக்கு 75,000 பக்தர்கள் உணவு அருந்தி வருவதாகவும், 2 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் அதனை ஆராய்ந்து 5 திருக்கோயில்களுக்கு முழுநேர அன்னதான திட்டம் என செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 844 கோடி மதிப்பீட்டில் 666 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்வதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் ஒரு அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அன்னதான திட்டம் கொண்டு வரப்படும் என்றும், 2008ம் ஆண்டு இறுதியாக குடமுழுக்கு நடைபெற்று இருக்கக்கூடிய நிலையில் இந்தாண்டே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மேலும், அன்னதான திட்டத்தை பொருத்தவரையில் 754 திருக்கோவில்களின் செயல்பட்டு வருவதோடு, நாளொன்றுக்கு 75,000 பக்தர்கள் உணவு அருந்தி வருவதாகவும், 2 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் செயல்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் அதனை ஆராய்ந்து 5 திருக்கோயில்களுக்கு முழுநேர அன்னதான திட்டம் என செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் எனவும் குறிப்பிட்டார்.

Also read... 10 ரூபாய்க்கு ஏலம் போன சம்பங்கி பூ - விரக்தியில் வீசிச்சென்ற விவசாயிகள்

அதேபோல், 844 கோடி மதிப்பீட்டில் 666 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆன்மீக அரசாக திமுக அரசு திகழ்வதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Minister Sekar Babu, TN Assembly