Home /News /tamil-nadu /

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் என்னென்ன?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் என்னென்ன?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சேகர்பாபு

சேகர்பாபு

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சித்திரை திருவிழாவிற்காக செய்துள்ள ஏற்பாடு குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் என்னென்ன என
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சித்திரை திருவிழாவிற்காக செய்துள்ள ஏற்பாடு குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, வருமுன் காப்பதற்கு ஒரு அரசு இருக்கிறது என்றால் அது நம் முதலமைச்சர் தலைமையில் அமைந்திருக்கக் கூடிய அரசு தான் என்றும், சித்திரை திருவிழாவுக்காக 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க தூய்மைப் பணியாளர்களை அதிகளவில் நியமித்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், 40 இடங்களில் கழிப்பறை வசதியும், அதிகளவில் குடிநீர் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்றும், மாவட்ட அமைச்சர்கள் களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

Also read... உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆவலுடன் காத்திருக்கிறேன்- அமைச்சர் சிவசங்கர்

அதேபோல், பக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, தரிசனத்ததுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அழகர் ஆற்றில் இறங்கும் போது தேவையான தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,அதனைக்காண முறையாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கச் சொல்லி முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என்றும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai, Madurai Chithirai Festival, TN Assembly

அடுத்த செய்தி