ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக ஆட்சியில் 754 கோவில்களில் அன்னதானம்.. ஆனால் அதிமுக ஆட்சியில் வெறும் 34 மட்டுமே - அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சியில் 754 கோவில்களில் அன்னதானம்.. ஆனால் அதிமுக ஆட்சியில் வெறும் 34 மட்டுமே - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

Tn Assembly | Minister Sekar Babu | திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுக ஆட்சியில் வெறும் 34 கோவில்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டது என்றும் ஆனால் தற்போதைய ஆட்சியில் 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அணைக்கட்டு பகுதியில் உள்ள பள்ளிகொண்டான் கோவில், ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது அதிமுக ஆட்சியில் வெறும் 34 கோயில்களில் மட்டுமே அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி உணவுகள் தரமாக வழங்குவதை உறுதிபடுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 341 கோவில்களுக்கு ஒன்றிய அரசு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read : திரு.வி.க நகரில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

இதையடுத்து பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் சமுதாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகள் நடைபெற்று வருகிறது அதிமுக ஆட்சியில் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் 70 கோடி ரூபாய் செலவில் கம்பி வட ஊர்தி அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டது.

ஆனால் இதுநாள் வரையில் துவங்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணிகள் துரிதமாக முறையில் நடைபெற்று வருகிறது 18 மாதத்திற்குள் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கம்பி வட ஊர்தி அமைப்பதற்க்கான பணிகள் நிறைவடைந்து முதல்வர் ரோப் காரினை துவக்கி வைப்பார் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Minister Sekar Babu, TN Assembly