ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வன்முறை விதை தூவலை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் சேகர் பாபு!

வன்முறை விதை தூவலை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் சேகர் பாபு!

விஷமத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறை விதை தூவலை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என மாரிதாஸ் கைது குறித்து அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

  • 2 minute read
  • Last Updated :

விஷமத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறை விதை தூவலை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என மாரிதாஸ் கைது குறித்து அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

மூதறிஞர் ராஜாஜியின் 143 வது பிறந்த நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு அமைச்சர்கள்  மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழகம் உள்ள வரை ராஜாஜியின் புகழ் நிலைத்து இருக்கும். மகாத்மா காந்தியின் சீடராக இருந்து, நல்ல நிர்வாக திறன் படைத்தவர் ராஜாஜி என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. விடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு அரங்கம் அமைப்பது, சிலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாரிதாஸ் கைது குறித்து பேசுகையில், தமிழகம் ஒற்றுமையான மாநிலமாக திகழ்கிறது. ஒரு சிலர் அவர்களது கருத்துக்களை, கொள்கைகளை பரப்புவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், விஷமத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறை விதை தூவலை ஒருபோதும்  தமிழக அரசு அனுமதிக்காது. மாரிதாஸ் பேட்டியில் திமுக ஆட்சியில் தமிழகம் காஷ்மீராக உருவாக்கும் என விஷ கருத்தை பரப்பி உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை இந்து சமய அறநிலையத்துறை மூலம் 487 ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1,587 கோடி பெறுமானம் உள்ள சொத்துக்கள் மீட்க பட்டுள்ளது. இணையம் மூலம் வாடகை வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மாதம் மட்டும் 20 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Also read... மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழப்பு - சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

அன்னை தமிழில் அர்ச்சனை  செய்ய போதிய அர்ச்சகர்கள் அனைத்து கோயில்களிலும் பணியமர்த்தபட்டுள்ளனர். மாற்றுதிறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் என்ற அறிப்பை அடுத்து இன்று சென்னை மற்றும் திருவண்ணாமலையில் இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

துறைமுகம் தொகுதில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மழை நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதற்கு சற்று காலதாமதம் ஆகும் என அப்போது கூறினார்.

First published: