Home /News /tamil-nadu /

இந்து சமய அறநிலையத்துறை விடுதிகள் - அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அப்டேட்

இந்து சமய அறநிலையத்துறை விடுதிகள் - அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அப்டேட்

minister sekarbabu

minister sekarbabu

Minister Sekar Babu | தமிழ்நாடு முழுவதும் இந்து சமய நிலையத்துறை கட்டுப்பாட்டில் 56 விடுதிகள் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விடுதிகளும் அடிப்படை வசதிகள் கொண்ட விடுதிகளாக உருவாக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி தொடங்கி, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 14-ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

Read More: ஆளுநர் ஆர்.என்.ரவியின் திடீர் மாற்றம்: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு?


கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகள் உரிய பாராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய நிலையத்துறை கட்டுப்பாட்டில் 56 விடுதிகள் உள்ளது. இதில் பழுது ஏற்பட்டுள்ள விடுதிகளுக்கு உரிய பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருத்தணி விடுதி புனரமைக்கப்படதாவும், வரும் காலங்களில் இந்த விடுதிகளை பராமரிப்பதை சுற்றுலாத்துறைக்கு கொடுப்பதா அல்லது தனியாருக்கு கொடுப்பதா என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து அனைத்து விடுதிகளும் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: DMK, Minister Sekar Babu, TN Assembly

அடுத்த செய்தி