முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர்பாபு (கோப்புப் படம்)

அமைச்சர் சேகர்பாபு (கோப்புப் படம்)

BJP | தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க ஆக்கப்பூர்வமாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஆஞ்சநேயனின் ஜெயந்தி விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ‘இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படவில்லை. கோவில் நகைகளை உருக்கும் பணிகளில் தொய்வு இல்லாமல் பணி நடைபெற்று வருகிறது.

சமயபுரம் திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட கோயில்களில் முன்னுரிமை தரப்பட்டு அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பரம்பரை கோயில் நிர்வாகத்தினர் தங்கம் உருக்க அனுமதி கேட்ட நிலையில் விரைவில் அனுமதி கொடுக்கப்பட உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக பாஜக இருக்கவேண்டும்.

பெட்ரோல் விலை குறைப்பு குறித்து தி.மு.க பேசி முடிவுக்கு வரவேண்டும் - அண்ணாமலை விளக்கம்

 தமிழக உரிமைகளை யார் பறிக்க நினைத்தாலும் விட்டுக்கொடுக்க திமுக எப்போதும் முன் வராது. உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு தோள் கொடுப்போம்.

top videos

    தமிழகத்தில் இதுவரை 1,640 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இனி வரும் காலங்களில் அது பல ஆயிரம் கோடியாக தொடர ஆக்கிரமிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்வோம். விரைவில் திருச்செங்கோட்டில் ரோப்கார் திட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: BJP, Minister Sekar Babu