2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதியுங்கள்: மத்திய அரசுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை!

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான பட்டியலிலிருந்து விடுபட்ட 8 லட்சத்து 28,419 பயனாளிகளின் விண்ணப்பங்களை நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதியுங்கள்: மத்திய அரசுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • News18
  • Last Updated: June 11, 2019, 7:31 AM IST
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணி மனு அளித்தார்.

அதில், 14-வது நிதி ஆணையத்தின் கீழ், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18-ம் நிதியாண்டுக்கான செயல்பாட்டு நிதியாக 560 கோடியே 15 லட்சம் ரூபாயையும், 2018-19-ம் நிதியாண்டின் 2-வது தவணை அடிப்படை நிதியாக ஆயிரத்து 608 கோடியே 3 லட்சம் ரூபாயையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


பியூஷ் கோயல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், 2 லட்சம் வீடுகளை கட்ட ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவீதமும், மற்றவர்களுக்கு 40 சதவீதமும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தளர்த்தி தகுதிவாய்ந்த நபர்களுக்கு வீடுகளை ஒதுக்க மாநில அரசை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான பட்டியலிலிருந்து விடுபட்ட 8 லட்சத்து 28,419 பயனாளிகளின் விண்ணப்பங்களை நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.சேரன் மற்றும் நீலகிரி விரைவு ரயில்களில் காங்கிரஸ் அரசால் நீக்கப்பட்ட குளிர்சாதன வசதி இல்லாத முதல் வகுப்புப் பெட்டிகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also see... ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய விராட் கோலி!

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading