Home /News /tamil-nadu /

பெண் சிசுக்கொலைகளை தடுக்க நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் சரோஜா பேச்சு

பெண் சிசுக்கொலைகளை தடுக்க நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் சரோஜா பேச்சு

அமைச்சர் சரோஜா

அமைச்சர் சரோஜா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழகத்தில் இனி பெண் சிசு கொலை சம்பவம் நடைபெறாமல் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

பேரவையில் சமூகநலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், தமிழகத்தில் பெண் சிசுக்களை அழிக்க கள்ளிப்பால் கொடுக்கும் துரதிஷ்ட சம்பவம் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.

மேலும், சமூக நலத்துறையால் சரியான தொடர் நடவடிக்கை எடுக்கப்படாததே காரணம் எனவும் இச்சம்பவத்தால் தமிழகம் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிட்டதாகவும் உறுப்பினர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பெண் குழந்தைகள் கொல்லப்பட கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தொட்டில் குழந்தை திட்டம் எனவும்  பெண் சிசு கொலை சம்பவம் தெரிந்தவுடன் உடனடியாக கள ஆய்வு நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், இனியும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TN Assembly

அடுத்த செய்தி