விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் - அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் 312 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதாக அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்தார்.

news18
Updated: July 18, 2019, 2:33 PM IST
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் - அமைச்சர் உறுதி!
அமைச்சர் சம்பத்
news18
Updated: July 18, 2019, 2:33 PM IST
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய திமுக உறுப்பினர் சபா ராஜேந்திரன் கோவை திருப்பூர் மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக கர்நாடகாவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி சம்பத் தமிழகத்தில் 312 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதாக தெரிவித்தார்.


இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது எண்ணெய்க் குழாய்கள் பதிக்க 5 அடி பள்ளம் தோண்ட வேண்டும் என்றும் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னர் நிலங்களை சமன் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதே போன்று புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பதிக்கப்படுகிறது.

Loading...

அதே வேளையில் கேரளா மாநிலத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசாணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

Also see...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...