Home /News /tamil-nadu /

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் குறைந்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் குறைந்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

Pongal gift | பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் குறைந்தால் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் குறைவாக இருந்தால் 18005993540 என்ற எண்ணிலும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    சட்ப்பேரவை நிகழ்வுகளுக்கு பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘ "பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் முறையாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.

    மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெரும் பொதுமக்கள் 21 பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும், பொருட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் எனவும், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    ஆவின், போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்



     மேலும், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அனைவரும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பதால், அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள் என்றார். மேலும், ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள் தரமானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


    மேலும், அதிமுக ஆட்சியில் உண்மைக்குப் புறம்பான திட்டங்களை தெரிவித்து அது அனைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Pongal Gift

    அடுத்த செய்தி