ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரேஷன் கடையில பொங்கல் பரிசு வாங்க போறப்போ இதை மறக்காதீங்க! அமைச்சர் உத்தரவு!

ரேஷன் கடையில பொங்கல் பரிசு வாங்க போறப்போ இதை மறக்காதீங்க! அமைச்சர் உத்தரவு!

பொங்கல் பரிசு தொகுப்பு பை

பொங்கல் பரிசு தொகுப்பு பை

Pongal gift | தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 02,03, 04 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 டோக்கன்கள் விநியோகம் இல்லை என்றும் தெரிவித்தார்.

நகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 300 அட்டைதாரர்களுக்கும், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு 200 அட்டைகளுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஏற்கனவே பொஙல் பரிசு தொகுப்பு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து கொடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வருகின்ற இரண்டாம் தேதிக்கு பதில் 5ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, இந்த முறை பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் வழங்கப்படாது என்றும், பொதுமக்கள் வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Pongal 2023, Pongal Gift, Tamilnadu government