கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

கனமழை எச்சரிக்கை: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்:  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
அமைச்சர் ஆர்.பி உதயகுமார் (கோப்புப்படம்)
  • Share this:
கனமழை காரணமாக நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய பேரிடர் மீட்புக் குழு கோயம்புத்தூர் விரைந்துள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த வருடம் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 203 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 41% குறைவு.


நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Also read... நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதி மக்கள் ஆடு மாடு குளிப்பாட்டுவதற்கு , குளிப்பதற்கும் செல்லக் கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது அதுவும் சரிசெய்யப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புக் குழு கோயம்புத்தூர் செல்ல உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து தேவைப்படும் இடங்களுக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading