Home /News /tamil-nadu /

தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Youtube Video

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னிடம் நெருங்கி வந்த தொண்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தள்ளிவிட்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



    மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னிடம் நெருங்கி வந்த தொண்டரை, அமைச்சர் ஆர் பி உதயகுமார் தள்ளிவிட்ட காட்சி, இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதன் ஒருபகுதியாக, திருமங்கலம் அருகே உள்ள கண்டு நாயக்கன்பட்டி, கீழ உரப்பனூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் பிஸ்கட் வழங்கினார். மேலும், சாத்தங்குடி கிராமத்தில் முகக் கவசம் வழங்கிவிட்டு அமைச்சர் புறப்பட தாயாரானார். அப்போது, தொண்டர் ஒருவர் அவரின் அருகே நெருங்கி வந்தார். இதை தடுத்த அமைச்சர், அந்த தொண்டரை பிடித்து தள்ளி விட்டார்.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தன்னை நெருங்கி வந்த தொண்டரை அமைச்சர் பிடித்து தள்ளிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் திருமங்கலம் பகுதியில் இந்நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.







    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Madurai, R.B.Udhayakumar

    அடுத்த செய்தி