நவீன இரும்பு மனிதர் அமித்ஷா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
நவீன இரும்பு மனிதர் அமித்ஷாவை தமிழக அரசைப்பாராட்டியுள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 2:48 PM IST
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும், ஆரோக்கியமான உணவு, மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு இன்றுடன் 150 நாட்களை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ‘பல்வேறு தேசிய விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. இந்திய டுடே ஆய்வில் தமிழக முதலமைச்சர் நல்ல நிர்வாகம் வழங்குகிறார் என தெரிவித்து உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் 18 சதவீதமாக இருந்தது. தற்போது 0.5 சதவீதம் தான் உள்ளது.
280 நோயாளிகள்தான் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது ஒருவர் கூட இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சிகிச்சையில் உள்ளனர்.
150 நாட்களில் சுமார் 15 லட்சம் உணவு, சத்து பான ங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளின் புகாரை மறுக்கும் விதமாக அதிமுக அரசின் சிறந்த செயல்பாட்டின் உதாரணமாக அம்மா கிச்சன் உள்ளது. சமீபத்தில் நிவர் புயலை தமிழக முதல்வர் அமைச்சர்கள் கையாண்ட விதம் குறித்து, அனைவரும் பாராட்டுகிறார்கள். புயல் வருவதற்கு முன்னரே, நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழக வரலாற்றிலே முதன் முறை அவசர கட்டுபாட்டு மையத்திற்கும், நீர் நிலைகளுக்கும் நேரில் சென்று முதல்வர் ஆய்வு நடத்தினார். பாசன ஏரிகளை கையாள்வது என்பது சிரமமான காரியம். கொரோனா காலத்தில், விளைச்சல் அதிகம். அனைத்து நீர் நிலைகளும் தமிழகத்தில் தற்போது நிரம்பி உள்ளது. அதற்கு தமிழக முதல்வரின் ராசி தான் காரணம். கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் அம்மா கிச்சன் 150 நாட்களை கடந்துள்ளது.
தற்போது நோய் தொற்றாளர்கள் குறைந்துள்ளதால் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படின் மீண்டும் திறக்கப்படும், மத்திய குழு ஆய்வு மேற்கொள்வர்கள். மாநில அரசும் சேத விவரத்தை வழங்கும் .அதன் பிறகு நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கும்.
திமுக ஓட்டு வாங்குதற்காக வேண்டும் என்றால், அதிமுக அரசை பற்றி குறை கூறலாம். திமுகவின் உள் நோக்கம் எடுபடாது. அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது. திமுக நாள்தோறும் குறை சொல்லி அறிக்கை கொடுத்தாலும் பலன் இல்லை.நவீன இரும்பு மனிதர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே, சென்னையில் அதிமுக அரசின் செயல்பாட்டை பாராட்டி உள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் மதுரை வருகிறார். மதுரைக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
ரஜினி நல்லவர். அவர் என்ன முடிவு எடுத்தாலும் வரவேற்கிறேன். பூனை கண்ணை மூடி கொண்டு, உலகம் இருண்டு உள்ளது என கூறினால் நாம் என்ன செய்வது. நல்லதே பார்க்க மாட்டேன், பேச மாட்டேன் என்றால் நாம் என்ன செய்வது’ என்று தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
280 நோயாளிகள்தான் தற்போது கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது ஒருவர் கூட இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தான் சிகிச்சையில் உள்ளனர்.
150 நாட்களில் சுமார் 15 லட்சம் உணவு, சத்து பான ங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளின் புகாரை மறுக்கும் விதமாக அதிமுக அரசின் சிறந்த செயல்பாட்டின் உதாரணமாக அம்மா கிச்சன் உள்ளது. சமீபத்தில் நிவர் புயலை தமிழக முதல்வர் அமைச்சர்கள் கையாண்ட விதம் குறித்து, அனைவரும் பாராட்டுகிறார்கள். புயல் வருவதற்கு முன்னரே, நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.