ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆசிரியர் தினம்: மதுரையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து அனுப்பிய அமைச்சர் உதயகுமார்

ஆசிரியர் தினம்: மதுரையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து அனுப்பிய அமைச்சர் உதயகுமார்

மதுரையிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மடல் அனுப்பினார் அமைச்சர் உதயகுமார்.

மதுரையிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மடல் அனுப்பினார் அமைச்சர் உதயகுமார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயகுமார், தான் கையெழுத்திட்ட வாழ்த்து மடலை அனுப்பி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆசிரியராக தன் வாழ்வைத் தொடங்கி இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு  விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம்.

Also read: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்த ஆண்டு கொரோனா காரணமாக அது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆயிரக்கணக்கான கடிதங்களை தானே கையெழுத்திட்டு, ஆசிரியர் பணியை வாழ்த்தியும் , நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் மகத்தான பணியைப் போற்றியும் உருக்கமான வாசகங்களுடனும் அதை எழுதியுள்ளார். அமைச்சரின் வாழ்த்துக் கடிதம் ஆசிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by:Rizwan
First published:

Tags: Minister udhayakumar, Teacher's Day, Teachers