முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக, தேமுதிக கூட்டணி தொடருமா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணி தொடருமா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

தேர்தலை முன்னிலைப்படுத்தி மக்களை சந்திப்பவர்கள் அதிமுகவினர் அல்ல என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வி்ஜயகாந்த் பிறந்தநாளன்று செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘தற்போது வரை, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் விருப்பம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்வது குறித்த விவாதத்துக்கு வழிவகுத்த நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை பேரிடர் மேலாண் கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தொண்டர்களின் கருத்தையே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கிறார் எனவும் இது அக்கட்சியின் தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது வரை அதிமுகவுடன் இணைந்தே பயணித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே கருத்தை முன்வைத்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது என்றும் தாங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

First published:

Tags: Minister udhayakumar, Premalatha Vijayakanth