அறிக்கை விடுவதை விட வேறு எந்த சேவையையும் ஸ்டாலின் செய்யவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

அறிக்கை விடுவதை விட வேறு எந்த சேவையையும் ஸ்டாலின் செய்யவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
ஆர்.பி.உதயகுமார்
  • Share this:
ஊரகப் பகுதிகளில் 100% பணியாளர்களுடன் 7ம் தேதி முதல் ஐடி நிறுவனங்கள்  செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 20% பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனங்கள் அறிவுறுத்தவேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கு தளர்வில் ஐடி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஐடி நிர்வாகிகளுக்கு ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் சார்பில் மேலும் தளர்வுகள் தேவை எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதற்குப் பதிலளித்த அவர், முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், அதிமுக களத்தில் பணியாற்றிவரும் நிலையில், திமுக வீட்டிலிருந்து அறிக்கை விடுகிறது; கொரோனாவை வைத்து அரசியல் செய்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில், மக்களுக்கு அறிக்கை விடுவதை விட வேறு எந்த சேவையையும் ஸ்டாலின் செய்யவில்லை என சாடினார்.


Also see:

மேலும் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது. கொரோனா காலத்திலும் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான ஆயத்த நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஈடுபட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.அவர் ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கான வேலை இழப்பு பற்றி  விளக்கமளிக்கையில், ஐ.டி. நிறுவனங்களில் போதிய Projects இல்லாததன் காரணமாக, ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. இருந்தாலும், ஊழியர்கள் வேலை இழக்கும் சூழலைத் தவிர்க்குமாறு ஐ.டி.  நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தினார்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading