‘20 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ஆர்.பி உதயகுமார்

மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும்...

 • Share this:
  20 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது என்றும், மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.

  அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியான பொட்டிபுரம், மீனாட்சிபுரம், செளடார்பட்டி, வளையப்பட்டி, உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  20 சதவீதம் இட ஒதுக்கீடு தற்காலிகமானது, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிற காரணத்தினால், ஆறுமாதத்திற்கு தற்காலிகமாக மசோதாவாக இருக்கும். இந்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

  68 சமுதாயத்தினர் 7.5 சதவீதம் என்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் என்றும் இதர சமுதாயத்திற்கு 2.5% என்று சிலர் கூறுகின்றனர் அது உண்மை இல்லை. செளடார்பட்டியிலிருந்து இருந்து சத்தியம் செய்து சொல்கிறேன் இது உண்மை அல்ல. மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான், இடஒதுக்கீடு வழங்கப்படும். எதிர்க் கட்சியினர் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

  டிஎன்டி என்பது நீண்டநாள் கோரிக்கை 45 ஆண்டுகால கோரிக்கையாகும் டிஎன்டி சான்றிதழை பெற்றுத்தந்த அரசு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.  பொய் பிரச்சாரம் செய்பவர்களை மறக்க முடியுமா 68 சமுதாயத்தினர் மீது நம்பிக்கை இருந்தால் நீங்கள் செய்திருக்கலாம் அல்லவா, ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசுதான் டிஎன்டி சான்றிதழை பெற்று தந்திருக்கிறது.

  அவர்கள் கேட்கிறார்கள் 2 சான்றிதழ்கள் ஏன் கொடுத்தீர்கள் என்று, டிஎன்டி மத்திய அரசுக்கு ஒன்று. உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு சான்றிதழ் கொடுப்பதற்கு முதலமைச்சர் நிச்சயமாக ஆவன செய்து, அதை பெற்றுத் தருவார். டிஎன் டி சான்றிதழ் கொடுத்த எங்களால் உங்களுக்கு ஒரே சான்றிதழ் கொடுக்க முடியாதா? டிஎன்டி சான்றிதழை வெத்துக்கொண்டு டி.என்.பி.எஸ்.ஸி, ஐஏஎஸ் போன்ற அனைத்து மத்திய அரசு தேர்வுகளையும் எழுதலாம். ஆனால் பொய் பிரச்சாரம் செய்து, அதிமுகவின் செல்வாக்கை கெடுக்க வேண்டும் என்று யாரேனும் கனவு கண்டால் அவர்களுடைய கனவு பகல் கனவாக தான் இருக்கும்.

  68 சமுதாயத்தினரின் 50 ஆண்டு கால கனவை நிறைவேற்றியது இரட்டை இலை சின்னம். உங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறோம் அதனால்தான் உரிமையோடு வாக்கு கேட்கிறோம்.

  எதையுமே செய்யாமல் மக்களை வஞ்சித்து எத்தனை எத்தனை வழக்குகள் இந்த 68 சமுதாய மக்கள் மீது தொடுக்கப்பட்ட என்பதை மக்கள் இதயத்தில் ரணமாக வைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. சட்டம் ஒழுங்கு தலைவிரித்தாடியது, சாதிச் சண்டைகள் தலைவிரித்தாடியது, இதை மனதில் வைத்துக்கொண்டு யாரேனும் பொய் பிரச்சாரம் செய்கிறார்களோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  Must Read : பெட்ரோல், டீசல் விலை: GST-க்குள் கொண்டு வர விவாதிக்கத் தயார் - நிர்மலா சீதாராமன்

  மக்களைப் பிளவு படுத்தி வாக்குகளை பெற வேண்டுமென முயற்சிக்காதீர்கள், அது தீ போன்று உங்களையே சுட்டு விடும் கத்தி போன்று உங்களையே குத்திவிடும்” என கூறினார்.

  - திருமங்கலம் செய்தியாளர், சிவக்குமார்
  Published by:Suresh V
  First published: