கல்வித்தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

குறிஞ்சிப்பாடியில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தை இடம் மாற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

news18
Updated: July 12, 2019, 12:34 PM IST
கல்வித்தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
news18
Updated: July 12, 2019, 12:34 PM IST
கல்வித்தகுதியின் அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் எத்தனை இடங்கள் காலியாக உள்ளது, அவற்றை பூர்த்தி செய்ய கிராம உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறரகள், அதற்காக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களில் ஓய்வுப்பெற்ற 1000 கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் 15000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார்.

கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கல்வி தகுதி அடிப்படையில் தான் பதவி உயர்வு அளிக்க முடியும் என பதிலளித்தார்.

மேலும் குறிஞ்சிப்பாடியில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தை இடம் மாற்றுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

Also see...

First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...