முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

எதிர்கட்சித் தலைவரே கொரோனாவை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் பிரச்சாரம் போகிறார். ஆனால் இளைஞரணி செயலாளர் மற்றும் 2ஆம் கட்ட தலைவர்களை இப்போதே பிரச்சாரத்திற்கு அனுப்புவது முரணாக உள்ளது எனவும் அமைச்ச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அடுத்த 2 தினங்களுக்கு தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தென்மாவட்டங்களில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை கவனிக்க வருவாய் நிர்வாக ஆணையாளர் பணீந்திர ரெட்டி நேரில் சென்றிருப்பதாக அமைச்சர்ர் தெரிவித்தார்.

தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லையில் மழை நீர் தேங்கிய இடங்களில் உடனடியாக செயல்பட்டு அகற்றியுள்ளதாகவும் தாழ்வான பகுதிகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாக்க முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர்28 ஆம் தேதி தொடங்கியது அக்டோபர் 28 முதல் தொடங்கி நவம்பர் 20ஆம் தேதி வரையிலான இயல்பான மலையளவு 308.9 மி மீ ஆனால் 241.7மி மீ அளவு மட்டுமே பெய்துள்ளது.... இயல்பான மழையளவை விட 25 சதவீதம் குறைவு.

தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 144 பாசன ஏரிகளில் 1069 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டி உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பருவமழைக்கு முன்பாகவே குடிமராமத்து பணி நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணி ஆகியவற்றால் தான் இந்த அளவிற்கு நீரை சேமிக்க முடிந்ததாக தெரிவித்தார்.

Also read... பட்டியல் சமூக பெண்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்...!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முயன்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மீறக்கூடாது. அவரது நோக்கம் மக்களை சந்திப்பதற்காக இல்லை, பரபரப்பு செய்வதற்காகவே உள்ளது என்றும் கூறினார்.

எதிர்கட்சித் தலைவரே கொரோனாவை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் பிரச்சாரம் போகிறார். ஆனால் இளைஞரணி செயலாளர் மற்றும் 2ஆம் கட்ட தலைவர்களை இப்போதே பிரச்சாரத்திற்கு அனுப்புவது முரணாக உள்ளது எனவும் அமைச்ச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

First published:

Tags: Minister udhayakumar, Udhayanidhi Stalin