ரசம் சாப்பிடுங்க கொரோனா போயிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரசம் சாப்பிடுங்க கொரோனா போயிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சளி, இருமல் இருந்தால் பயப்பட வேண்டாம் மருத்துவமனை அருகிலேயே இருக்கின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.

 • Share this:
  ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேசினார். அப்போது, ரசம் குடித்தால் கொரோனா போய்விடும் என்று பேசிய அவர், பயமின்றி பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிக்சை பெறுமாறு வலியுறுத்தினார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

  பின்னர், விழாவில் அவர் பேசுகையில், இப்போது அமைந்திருக்கும் அம்மா மினி கிளினிக் பகுதியான மல்லி, டில்லிக்கு இணையான பகுதி சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக அமைந்திருக்கிறது என்றார்.  மேலும் படிக்க...Master Release: தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

  மேலும், மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டுவிட்டு, ஒரு கிளாஸ் அல்லது அரை கிளாஸ் ரசத்தை குடித்தால் கொரோனா வைரஸ் போய்விடும் என்றார். மிளகு ரசம், வெள்ளை பூண்டு ரசம், சுக்கு ரசம் குடிக்க வேண்டும் என்றும் வலியுத்தினார். மேலும், ‘சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை’ என்ற வாசகத்தை நினைவு கூர்ந்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், ஆயினும், சளி, இருமல் இருந்தால் பயப்பட வேண்டாம் மருத்துவமனை அருகிலேயே இருக்கின்றது என்றும், நடந்தே மருத்துவமனைக்கு வந்துவிடலாம் என்றும் கூறி, கொரோனா, உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் அச்சமின்றி உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதுபோல மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
  Published by:Suresh V
  First published: