பாஜக உடன் சேர்ந்ததால்தான் பல இடங்களில் பலம் பெற்றோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Web Desk | news18
Updated: July 6, 2019, 3:00 PM IST
பாஜக உடன் சேர்ந்ததால்தான் பல இடங்களில் பலம் பெற்றோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Web Desk | news18
Updated: July 6, 2019, 3:00 PM IST
திமுகவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல், ஏசி காரில் பிரசாரம் செய்தவர்க்கு பதவி வழங்கியிருப்பது ஸ்டாலின் குடும்ப பாசத்தில் மூழ்கி உள்ளதை காட்டுகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

சிவகாசியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “10 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல், ஏசி காரில் பிரசாரம் செய்தவரான உதயநிதிக்கு பதவி வழங்கியிருப்பது  ஸ்டாலின் குடும்ப பாசத்தில் மூழ்கி உள்ளதை காட்டுகிறது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது. அவர் மிகச்சிறந்த தமிழ் போராளி. தமிழ் உணர்வுகளையே பிரதிபலித்தார்” என்றார்.


செய்தியாளர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது, “ மோடி ஒரு சாமானியர். முதலாளிகளுக்கான பட்ஜெட் இல்லை. இது ஏழைகளுக்கான பட்ஜட்” என்றார்.

மேலும் ஹைட்ரோ கார்பன்  குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,“ ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கின்ற எந்தத் திட்டத்தையும் இந்த அரசு எதிர்க்கும். மக்கள் நலன் சார்ந்த திட்டம் மட்டுமே ஆதரிக்கப்படும்” என்றார்.

உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி கூட்டணி தொடரருமா?  என்ற கேள்விக்கு, “ பிஜேபியுடன் சேர்ந்ததால்தான் பல இடத்தில் பலம் பெற்றோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்றுள்ளது. பிஜேபியுடன் கூட்டணி என்பதால் தோல்வி இல்லை” எனவும் தெரிவித்தார்.

Loading...

Also see... வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநானூறு கூற்றை தமிழில்  கூறி அவையை கலகலக்க வைத்த நிர்மலா

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...