திருத்தணி கோவிலில் உப்பு மிளகு பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முருகன் கோயிலின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு திருக்கோயில் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

 • Share this:
  திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில் மற்றும் திருத்தணி முருகன் கோவிலின் உப கோயில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஆகிய இரண்டு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து மற்றும் உப்பு மிளகு பரிகார பூஜைகள் செய்து  பால்வளத் துறை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

  திருத்தணி முருகன் கோயில் மலையடிவாரத்திலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக  சாமி தரிசனத்திற்கு மலைக்கோவிலுக்கு வந்தனர். இந்நிகழ்ச்சியில் முருகன் கோயிலின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு திருக்கோயில் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

  திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்த பின்பு மலைக்கோவிலில் மாட வீதியில் உப்பு மிளகு பரிகார பூஜையை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.
  Published by:Vijay R
  First published: