அ.ம.மு.க பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடிப்பேன் - செய்தியாளர்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.ம.மு.க பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடிப்பேன் - செய்தியாளர்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அ.ம.மு.க பற்றி கேள்வி கேட்டால் செய்தியாளர்களை அடிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அனைத்து கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ளனர். தற்போது, அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ராஜேந்திர பாலாஜி தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தை திறந்துவைக்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகை தந்தார்.

    அப்போது செய்தியாளர்கள் அ.ம.மு.க குறித்து கேள்விகள் எழுப்பினர். அதனால், ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி, ‘அ.ம.மு.க குறித்து கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்’ என்று காட்டமாக பதிலளித்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: