''ஆட்சியைக் கலைத்தால் தூக்கிப் போட்டு மிதித்திடுவோம்'' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா? நாங்களும் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கோம், எந்த வேலையும் செய்வோம்.

''ஆட்சியைக் கலைத்தால் தூக்கிப் போட்டு மிதித்திடுவோம்'' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
ராஜேந்திர பாலாஜி (கோப்பு படம்)
  • News18
  • Last Updated: July 28, 2019, 7:11 PM IST
  • Share this:
கர்நாடகாவைப் போன்று விரைவில் தமிழகத்திலும் ஆட்சி கவிழும் என்ற மு.க.ஸ்டாலின் பேச்சிற்கு அப்படி ஏதாவது செய்தால் சும்மா பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்திடுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக பதிலளித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “அ.தி.மு.க மனிதர் ஆரம்பித்த கட்சி இல்லை. புனிதர் ஆரம்பித்த கட்சி. சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க 13 சீட்டுகளை வென்றது. 13 என்றாலே பேய் நம்பர். அ.தி.மு.க பெற்ற 9 சீட்டுகளும் நவரத்தினங்கள்.


ஒளரங்கசீப் போல் உடன்பிறந்த அண்ணனையே காட்டிக் கொடுத்துவிட்டு இன்றைக்கு தி.மு.கவின் தலைவராக சூழ்ச்சி செய்து வந்தவர்தான் ஸ்டாலின். தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் என சீமான்களின் கையில் திமுக மாட்டிக்கொண்டது.

கோபாலபுரத்தில் உள்ள பெருமாள் மற்றும் பிள்ளையார் கோவிலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எழுதி வாங்கி விட்டார்கள். கர்நாடகத்தைப் போல் ஆட்சியைக் கலைக்க இங்கு என்ன குமாரசாமி ஆட்சியா நடக்கிறது? அப்படி ஏதாவது செய்தால் சும்மா பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்திடுவோம்.

திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா? நாங்களும் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கோம். எந்த வேலையும் செய்வோம். எடப்பாடி கண் அசைத்தால், கை காட்டினால் திமுகவிற்கு சாவு மணி அடித்துவிடுவோம். அதிமுகவில் இருப்பவர்களின் ஒவ்வொரு பின்னாலும் ஒரு வீர வரலாறு இருக்கிறது. அதிமுகவில் எல்லாரும் தளபதிகள் தான்'' என்று ஆவேசமாக பேசினார்.Also Watch

First published: July 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading