• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராணுவ பட்ஜெட்டை குறைத்து புயல் நிவாரணம் கொடுங்க - ராஜேந்திர பாலாஜி

ராணுவ பட்ஜெட்டை குறைத்து புயல் நிவாரணம் கொடுங்க - ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Cyclone Gaja | தமிழகமெங்கும் இருக்கும் பெரு நிறுவன முதலாளிகள், ஆலை அதிபர்கள் போன்றவர்கள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களை தத்தெடுக்கவும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் போர் நடைபெறும் சூழல் இல்லாத நிலையில், மத்திய அரசு ராணுவத்திற்காக ஒதுக்கும் நிதியை குறைத்துக் கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  மக்களின் குறைகளை கேட்ட மத்திய குழுவினர், டெல்டாவுக்கு நிச்சயம் உதவி செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். இல்லையென்றால், இந்தியாவில் இருக்க வேண்டுமா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்.

கஜா, புயல், gaja, cyclone
கஜா புயலால் சாய்ந்த வாழை மரங்கள்


மேலும் வடக்கு, தெற்கு என்ற பாரபட்சம் பார்க்காமல், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் போர் நடக்க வாய்ப்பில்லாத இந்த சூழலில், மத்திய அரசு ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்தார்.

மேலும், தமிழகமெங்கும் இருக்கும் பெரு நிறுவன முதலாளிகள், ஆலை அதிபர்கள் போன்றவர்கள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களை தத்தெடுக்கவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: