”வெள்ளை அறிக்கை, மஞ்சள், பச்சை அறிக்கை ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம்” - ராஜேந்திர பாலாஜி

”வெள்ளை அறிக்கை, மஞ்சள், பச்சை அறிக்கை ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம்” - ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
  • News18
  • Last Updated: September 11, 2019, 9:50 AM IST
  • Share this:
ஸ்டாலினுக்கு பொறாமை, இயலாமையில் பேசுகிறார், வெள்ளை அறிக்கை கேட்கிறார், நாங்கள் வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கை ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில் கூறுகையில்,

“திமுகவில் தவறில்லை என தினகரன் கூறுவது விரைவில் அவரும் திமுகவில் இணைவார் என்பதை காட்டுகிறது, அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் அல்ல சிவாஜி கணேசன் ரசிகர். ஜெயலலிதா இருக்கும்பொழுது இப்படி பேச முடியுமா, வாயை கிழித்திருப்பார்கள்.


திமுக தலைவர் ஸ்டாலின் தவிர்த்து தமிழ்நாட்டில் அனைவரும் முதல்வர் வெளிநாட்டு பயணத்தை பாராட்டுகிறார்கள். ஸ்டாலினுக்கு பொறாமை, இயலாமையில் பேசுகிறார், வெள்ளை அறிக்கை கேட்கிறார், நாங்கள் வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கை ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம்

தமிழகத்தில் எடப்பாடியார் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவார், சேலத்தில் பால்வள ஆராய்ச்சிமையம் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்