"தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்" - முதல்வர் வேட்பாளர் குறித்து ராஜேந்திர பாலாஜி கருத்து

ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற வகையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். அது பல்வேறு விவாதங்களுக்கு உள்ளானது. தற்போது அவர் கட்சி எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

  Also read: கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு

  இவர் சிவகாசி அருகேயுள்ள தனது குல தெய்வக் கோயில் கும்பாபிஷேகத்திற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு புனிதத் தலத்திற்குச் சென்று நீராடி, அங்கிருந்து தண்ணீர் எடுத்து வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரியைத் தொடர்ந்து தற்போது ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நீராடி, கும்பாபிஷேகத்திற்கான புனித நீரை சேகரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தொடர்பான முடிவுகளை கட்சி தலைமையே எடுக்கும் என்றார்.
  Published by:Rizwan
  First published: