• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டாலின் தன்னை அரசியலிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டால் மக்களுக்கு நல்லது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலின் தன்னை அரசியலிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டால் மக்களுக்கு நல்லது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

  • Share this:
    கொரோனா காலம் முடியும் வரையிலாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக கூறியுள்ளார்.

    கொரோனா குற்றச்சாட்டுகள் தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் திமுக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மனச்சோர்வு அடையும்படி செய்வதாக விமர்சித்துள்ளார்.

    ஒன்றிணைவோம் திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா பரவியதாக குற்றம்சாட்டியுள்ள அவர், நிவாரணம் வழங்குவதாக கூறி, ஒட்டுமொத்த மக்களின் மனநிம்மதியை கெடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    கொரோனா காலத்திலும் தமிழக அரசு 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராஜேந்திர பாலாஜி, கொரோனா காலம் முடியும் வரையிலாவது, மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    Also see... டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு காய்ச்சல் & மூச்சுத்திணறல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: