மோடியின் தலைமையில் வலுவான ராணுவம் உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 • Share this:
  1947-ல் இருந்த ராணுவம் தற்போது இல்லை. மோடியின் தலைமையில் வலிமையான ராணுவம் உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

  சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, ரூபாய் இருபது லட்சம் மதிப்பில், விஸ்வநத்தம் பகுதியில் நீர் உந்து நிலையம் அமைக்கப்படுகிறது.

  இதற்கான பூமிபூஜை பணிகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’1947-ல் இருந்த ராணுவம் தற்போது இல்லை எனவும், மோடி தலைமையில் வலுவான ராணுவம் இருப்பதாகவும் கூறினார்.

  Also read... கொரோனா நோயாளிகளின் தினசரி உணவு இதுதான்...!

  எதிர்க்கட்சிகள் கூறும் அறிவுரைகளை முதல்வர் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், நல்ல கருத்துகளை சிறு குழந்தைகள் சொன்னால் கூட முதல்வர் ஏற்றுக்கொள்வார் என்றார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: