முஷாரப்க்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 • News18
 • Last Updated :
 • Share this:
  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆனைக்குட்டம், சேர்வைக்காரன்பட்டி, வெள்ளூர் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறர்கள்

  அதிமுக என்கிற இயக்கம் வலுவாகவும்,தெம்பாகவும், திராணியாகவும் இருக்கிறது. அதிமுகவை வெல்வதற்கு இனி ஒரு கட்சி பிறந்து தான் வரவேண்டும். அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது” என்று கூறினார்.

  மேலும், “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் ஒரு நிலைப்பாட்டோடு மக்களிடம் பீதியைக் கிளப்பி விடுகிறார்கள். ஸ்டாலினைப் பொருத்தவரை எரிந்த வீட்டில் புடுங்க வேண்டும் என்று நினைப்பவர்; மொழிப் பிரச்சனை இனப்பிரச்சினையை தூண்டிவிட வேண்டும் என்கிற எண்ணம் காலங்காலமாக அவருக்கு இருக்கிறது. 

  மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார். அந்த மாநிலத்தில் தீவிரவாதத்தை உருவாக்குகிறார். இதுபோன்ற முதலமைச்சர் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் அந்த மாநிலம் சுடுகாடாகிவிடும்.

  உள்நாட்டுக் கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என்றுதான் ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி திட்டம் தீட்டுகிறார்கள் என்கிற தகவல் எனக்கு வந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி மத்திய மாநில அரசுகள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

  பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி முஷாரப்-க்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது.  முஷாரப் எப்பொழுதும் பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிராக ஒன்றும் செய்ததாக தெரியவில்லை” என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
  Published by:Sankar
  First published: