பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

அமைச்சர் ராஜகண்ணப்பன்

டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூயாயை கடந்துள்ளது. டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயரலாம் எனத் தகவல் பரவியது. ஆனால், இதனை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “இலவச பேருந்து சேவை மூலம் பெண்கள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 15,227 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறன.

    வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். மலைப் பகுதிகளில் மட்டும் அரசு சார்பில் 498 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 2,650 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளதால் ஏசி பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. கும்மிடிப்பூண்டியில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும். அதேபோல புதிதாக 2,000 புதிய டீசல் பேருந்துகள் வாங்கத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Must Read : பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் நெத்தியடி - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்

    அரசுப் போக்குவரத்துத் துறையில் 7000 பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய பணியாளர்களைச் சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும். கொரோனாவுக்கு முன்பு அரசு பேருந்துகளில் 1.60 கோடி பேர் பயணித்த நிலையில், இப்போது அது 90 லட்சம் பயணிகளாகக் குறைந்து விட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. அதேநேரம் இது குறித்து காலப்போக்கில் அப்போது இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்துப் பேசினார்.
    Published by:Suresh V
    First published: