ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளிக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளிக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி நடைபெறுகிறது. என்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தீபாவளிக்கு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

  மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

  தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து முறையான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் உத்தரவுப்படிகட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம்.

  அதிக கட்டணம வசூலிக்கும் பேருந்துகளில் பெயர்களை குறிப்பிட்டு புகார் சொன்னால் சட்டப்படி கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா (CCTV) பொருத்தம் பணி தற்போது சென்னை போக்குவரத்து பணிமனைகளில் (MTC) யில் நடைபெறுகிறது. 2900 கேமரா பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது.

  பேருந்துகளில் தவறுகள் நடக்காத வண்ணம் முதலமைச்சர் உத்தரவு படி கண்காணிக்கப்படும், இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றார்.

  Must Read : நிரம்பும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி : இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  மேலும், தற்போது தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

  செய்தியாளர் - சிவக்குமார், திருமங்கலம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Diwali, Govt Bus, Omni Bus