Home /News /tamil-nadu /

மக்கள் கோரிக்கைவைத்தால் சாலையோரங்களில் அரசு சார்பில் ஹோட்டல்கள் -அமைச்சர் ராஜகண்ணப்பன்

மக்கள் கோரிக்கைவைத்தால் சாலையோரங்களில் அரசு சார்பில் ஹோட்டல்கள் -அமைச்சர் ராஜகண்ணப்பன்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அரசு சார்பில் சாலையோரங்களில் ஹோட்டல்கள் அமைக்க பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    மக்கள் கோரிக்கை விடுத்தால் சாலையோரங்களில் அரசு சார்பில் ஹோட்டல்கள் திறக்க பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    சென்னையிலிருந்து சிவகங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘தேர்தல் நேரம் என்பதால் அரசு பணிகள் குறித்து கேள்வி கேட்க வேண்டாம். தேர்தல் பணிகள் முடிந்த பிறகு புதிய பேருந்து நிலையம் கட்டிட பணிகள் தொடங்கப்படும். தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

    பேருந்து பயணம் செய்யும் பொழுது உணவு விடுதிகளின் தரம் குறித்த கேள்விக்கு, ‘குற்றச்சாட்டுகள் வரும் பட்சத்தில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் வரும்பட்சத்தில் எந்த ஒரு ஹோட்டல்கள் மீதும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து அரசு மற்றும் முதல்வர் உறுதியாக உள்ளார். எனவே புகார்கள் எழும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அன்னூர் பைனான்சியர் கொலையில் பகீர் தகவல் - இந்து முன்னணி நிர்வாகி உட்பட இருவர் கைது



    அரசு சார்பில் ஹோட்டல்கள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு.? அரசு சார்பில் ஹோட்டல்கள் திறக்கப்படுவது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு அதை பரிசீலிக்கும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு 100% உள்ளது என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Hotel

    அடுத்த செய்தி