கொரோனா இறப்பு எண்ணிக்கையை மறைத்தால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளை எச்சரித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் கொரோனா மரணங்களை மறைத்து முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு துரோகம் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிகாரிகளை எச்சரித்து உள்ளார்.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் & மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நிதி அமைச்சர், வணிக வரித்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ’மதுரையில் பதிவாகும் கொரோனா மரணங்கள் தொடர்பாக மயானத்திலிருந்து வரும் தகவல், மாவட்ட நிர்வாகம் அளிக்கும் தகவல், மாநில சுகாதாரத்துறை அளிக்கும் தகவல் அனைத்திலும் முரண்பாடு உள்ளது.

இது ஏற்றுக்கொள்ள முடியாத, தாங்க முடியாத ஒரு செயல். இந்த செயல் எதனால் நிகழ்கிறது?அலுவலக பிழையா? அல்லது முதலமைச்சர் வார்த்தைக்கு துரோகமா? இந்த பிழை இனிமேலும் தொடரவே கூடாது. தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகளை எச்சரித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: